Thursday, March 29, 2007

உலகக் கோப்பை 2007 (World Cup 2007)

நவ்ரச நாயகன் "திராவிட்" பராசக்தி பாணியில் பேசினால்?!!

"உலகக் கோப்பை. பல விசித்திரமான போட்டிகளைச் சந்தித்திருக்கிறது..
விசித்திரமான ஆட்டக்காரர்களைப் பார் த்திருக்கிறது.
ஆனால் , இந்தப் போட்டி விசித்திரமும் அல்ல.
நான் விசித்திரமான ஆட்டக்காரனும் அல்ல.
போட்டிகளிலே கலந்து கொண்டு சர்வசாதாரணமாக தோல்விகளை
எந்தக் கேவலமும் இன்றி் தோளலே சுமந்து வரும் சாதாரண
இந்திய கேப்டன் தான் நான்.

பங்களாதேசிடமும், இலங்கையிடமும் தோற்றேன்.
உலகக் கோப்பையைத் தவற விட்டேன்.

குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
பங்களாதேசிடமும் இலங்கையிடம்தோற்றேன்
-
அவர்களிடம் தோறக் வேண்டுமே என்பதற்காக அல்ல.
ஆனால் நேரு வகுத்த பஞ்சசீலக் கொள்கையின் படி
அண்டை நாடுகளோடு அன்யோன்யமாகப் பழக வேண்டுமே என்பதற்காக.

உலகக் கோப்பையைத் தவற விட்டேன்.
அது தூக்குவதற்கு சிரமமாக இருக்கிறதென்பதற்காக
அல்ல. தன்னைப் போல பிறரையும் நேசி என்று இயேசுபெருமான்
சொன்னதை மற்றவர்களுக்கும் உணர்த்துவதற்காக.

உனக்கேன் அக்கறை ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்.
நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன்.

ஆறு ஃபீலடரை ஆஃப்சைடில் நிறுத்தி விட்டு பந்து போடச
சொன்னால் லெக்ஸ்டம்புக்கு வெளியே பந்து போடும்
பரதேசிகளால் பாதிக்கப்படேன்.

செத்த பாம்பு போல பெர்முடா கிடைத்தால்
சாத்து சாத்தென்று சாத்திவிட்டு தேவை வரும்போது மட்டும்
வெயில் தாங்கலைன்னு பெவிலியனுக்கு ஓடும் மாஸ்டர்
பிளாஸ்டர்களால் பிளாஸ்டர் போட்டுக் கொள்ளும்பட& #3007;
பாதிக்கப்பட்டேன்.

கேளுங்கள் என் கதையை.
என் வீட்டில் கல்லெறியுமுன் தய்வுசெய்து கேளுங்கள்
என் கதையை....."


"நாயகன்" பாணீயில் இந்திய அணியின் நாயகன் பேசினால்..??!!

" அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன்.

கங்குலி அடிச்சபோது பூசணிக்காய் உடம்பை வச்சுக்கிட்டு
அரைகிலோ மீட்டர் ஓடிப் போய் பந்தைப் புடிச்சான் பாரு முரளித 92;ன்
அவனைநிறுத்தச் சொல் நான் தோக்குறதை நிறுத்துறேன்.

ஆஃப்சைடுலதான் அடிப்பான்ன்னு தெரிஞ்சு எலிப்பொறில மசால்வடை
வைக்குற மாதிரி 'ஸ்லிப் ' வைச்சு சேவாக்கைத் தூக்குனான் பாரு ஜெயவர்தனே.
அவனை நிறுத்தச் சொல நான் நிறுத்துறேன்.

நாலு அடி நடந்து வந்து பந்து போடும்போதும் 'நோபால் '
போட்டான் பாரு டெண்டுல்கர்.
அவனை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன்.

இல்லாத ரன்னுக்காக நாயா ஓடி வந்தான் பாரு யுவராஜ் சிங்.
அவனை ஓடாம நிக்கச் சொல்.
நான் நிறுத்துறேன்.

எந்தப் பக்கம் அடிச்சாலும் அந்தப் பக்கம் ஃபீல்டரை வச்சிருக்கான் பாரு.
அதை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன்.

எங்க தூக்கி அடிச்சாலும் புடிக்குறானுங்க பாரு. அதை நிறுத்தச்
சொல் நானும் நிறுத்துறேன்.

புறப்படும்போதே "க்மான் இந்தியா"ன்னு அபசகுனமா பாட்டு
பாடி உடனே திரும்பி வரச் சொன்னார் பாரு சங்கர் மகாதேவன்.
நிறுத்தச் சொல்.

எல்லாத்துக்கும் மேலா , எங்களையெல்லாம் மனுசங்களா
மதிச்சு ப்ளாக்ல பொலம்புறானுங்க பாரு வெவஸ்தை கெட்டவனுங்க.
அவனுங்களை நிறுத்தச் சொல்.

அப்புறமாவது தோக்குறதை நிறுத்தலாமான்னு யோசிக்கிறேன்.."

நீங்கள்தான் தேசத் துரோகிகள்
- ராகுல்திராவிட்அறிக்கை

" இப்ப என்ன குடிமுழுகிப் போச்சு? நாங்க தோத்ததுனால
இனிமே பசங்க பரிட்சை நேரத்துல டிவி முன்னால உக்காராம படிப்பானுங்க.
ராத்திரி முழுக்க கண்முழிச்சு டிவி பாரர்த்துட்டு காலைல ஆபிசுல
தூங்காம இருப்பானுங்க(?!)
ராத்திரி முழிக்கிறதால நாட்டுக்கு மின்சார செலவு மிச்சம்.
வேளாவேளைக்கு தூங்குறதால உடம்புக்கு நல்லது.
நடுராதிரில டிவி பாக்குறதுக்காக டீ ,காப்பி , நொறுக்குத்தீனி
மாதிரி வெட்டிச்செலவு கிடையாது.

வேளைகெட்ட வேளையில் தூங்கப்போறதால ஜனத்தொகை
பெருக இருந்த வாய்ப்பும் கொறஞ்சு போகுது.
இப்படி எவ்வள்வோ நாட்டுக்காக எவ்வள்வோ பெரிய தியாகம்
செஞ்சும் என் வீட்டு மேல கல்லடிக்குற நீங்க எல்லாம்தான்
தேசத் துரோகிகள்"

- என்று ராகுல் திராவிட் உருக்கமாக அறிக்கை விட்டிருக்கிறார்

(I got it from an Unknown Source)

No comments: